ஈஸியான பஞ்சாபி மட்டன் மசாலா NPR மசாலாவில் செய்து அசத்துங்க…!

தேவையான பொருட்கள்:-

* மட்டன் – 500 கிராம்

* நெய் – 4 டேபிள் ஸ்பூன்

* NPR மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* NPR மட்டன் மசாலா – 2 டேபிள் ஸ்பூன்

* தயிர் – 1/2 கப்

* வெங்காயம் – 4 (நறுக்கியது)

* இஞ்சி விழுது – 2 டீஸ்பூன்

* பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

* NPR மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* கிராம்பு – 4

* தக்காளி – 3 (நறுக்கியது)

* ஏலக்காய் – 5

* மிளகு – 8

* பட்டை – 1 துண்டு

* NPR கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* NPRமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – 2 கப்

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:-

* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பெரிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும்,

ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகு சேர்த்து ஒரு நிமிடம் தாளித்து, பின் வெங்காயத்தைப்

போட்டு உப்பு சிறிது தூசி நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

* வெங்காயத்தின் நிறம் மாறும் போது, அதில் இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து

பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் NPR மஞ்சள் தூள், NPR மிளகாய் தூள், NPR மட்டன் மசாலா

NPR மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். தக்காளி

நன்கு மென்மையாக வதங்கி, மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது,

கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.

* மசாலா மட்டனுடன் நன்கு சேர்ந்த பின், சற்று புளித்த தயிரை ஊற்றி நன்கு கிளறி,

4-5 நிமிடம் வேக வைக்கவும்.

* பின் அதில் நீரை ஊற்றி நன்கு கிளறி, அதில் கொத்தமல்லி இலை மற்றும் NPR கரம்

மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து மிதமான தீயில் 25 நிமிடம்

வேக வைத்து இறக்கினால், சுவையான பஞ்சாபி மட்டன் மசாலா தயார்.

Translate »