காளான் வறுவல் இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க!!
தேவையான பொருட்கள்:-
1.காளான் – ½ கிலோ (நீளவாக்கில் நறுக்கியது)
2.வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
3.பூண்டு – 3-4 பற்கள் (பொடியாக நறுக்கியது)
4.பச்சை மிளகாய் – 2-3 (கீறியது)
5.NPR மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
6.NPR மிளகு தூள் – 1 தேக்கரண்டி
7.NPR மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
8.NPR கரம் மசாலா தூள் – 1/4 தேக்கரண்டி
9.உப்பு – தேவையான அளவு
10.கொத்தமல்லி தழை- அலங்கரிக்க
தாளிக்க தேவையான பொருட்கள்:-
1.எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
2.கடுகு – ½ தேக்கரண்டி
3.சீரகம் – ½ தேக்கரண்டி
4.கருவேப்பிலை – 1 கொத்து
செய்முறை :-
1.காளானை சுத்தம் செய்து கிச்சன் டவலால் துடைக்கவும். பொதுவாக வறுவல் செய்யும் போது காளானை கழுவினால் அதில் உள்ள ஈரப்பதம் குறைவதில்லை. அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வறுக்கும்போது மொறுமொறுப்பாக இருக்காது.
2.காளானை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
3.ஒரு அகலமான கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம் , கருவேப்பிலை தாளிக்கவும்.
4.கடுகு வெடித்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
5.அடுத்து காளானை சேர்த்து குறைந்த தீயில் 6 நிமிடங்கள் அல்லது காளான் உள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
6.உப்பு, NPR மிளகாய் தூள், NPR மிளகு தூள், NPR மஞ்சள் தூள், NPR கரம் மசாலா தூள் சேர்க்கவும். நான் சில சமயங்களில் ¼ கப் குடமிளகாய் சேர்ப்பதுண்டு. வறுவலின் நிறம் நன்றாக இருக்க, ஆனால் அது உங்கள் விருப்பம்.
7.2-4 நிமிடங்கள் நன்றாக வதக்கவும் காளான் நிறம் மாறும் வரை.
8.அடுப்பை அணைத்து வேறு பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றவும். கொத்தம்ல்லி தழை மற்றும் எலிமிச்சை துண்டுகள் கொண்டு அலங்கரிக்கவும்.