கம கமனு வீடே மணக்கும் படி மட்டன் கிரேவி செய்து அசத்துங்க NPR Masala-உடன்..!
தேவையான பொருட்கள் :-
- மட்டன் – ½ கிலோ
- சின்ன வெங்காயம் – 10-12 எண்ணம்
- தக்காளி – 1
- இஞ்சி பூண்டுவிழுது – 1 டீஸ்பூன்
- NPR மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
- NPR மட்டன் மசாலா – 1 டீஸ்பூன்
- NPR மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
- சோம்பு – ½ டீஸ்பூன்
- கசகசா – ¼ டீஸ்பூன்
- தேங்காய் – சிறிதளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- தாளிக்க: பட்டை, சோம்பு, கடுகு உளுந்து, கிராம்பு, இலவங்கப்பட்டை இலை
கருவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை :-
- குக்கரில் சுத்தம் செய்துள்ள மட்டன் தூண்டுகளுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 4 விசில் வைத்து இறக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, போட்டு தாளித்து அதனுடன் பட்டை, சோம்பு இலவங்கப்பட்டை இலை மற்றும் கிராம்பு சின்னவெங்காயம் போட்டு வதக்கவும், அதில் ஒரு சிறிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட்யை போட்டு வதக்கவும்
- அதனுடன் NPR மிளகாய் பொடி, மட்டன் மசாலா, மல்லித் தூள் போட்டு வதக்கவும்.
- தேங்காய், பெருஞ்சீரகம், முந்திரிப்பருப்பு கசகச சேர்த்து அரைத்த கலவையை சிறிதளவு(1 டீஸ்பூன்) போட்டு வதக்கவும்.
- மட்டனைப் வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து நன்றாக மசாலா கலவையில் கிளறி உப்பு சேர்த்து சரிபார்க்கவும். எண்ணெய் மேலே கொதித்து வெளியே வந்தவுடன் இறக்கி விடவும்.
- அதன்மேல் புதினா, கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கினால் மட்டன் கிரேவி தயார்.
- மட்டன் கிரேவி தோசை, பரோட்டா, சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அறுமையாக இருக்கும்.