NPR Masala-வுடன் சுவையான ஆலு டிக்கி செய்து அசத்துங்க..!
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 4
- NPR மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
- NPR கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- உப்பு – 1/2 டீஸ்பூன்
- லெமன் ஜூஸ் – 1/2
- அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
பின் வேக வைத்த உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, லெமன் ஜூஸ், அரிசி மாவு அனைத்தையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு பிசைந்த மசாலாவை கொஞ்சம் உருண்டையாக எடுத்து தட்டையாக தட்டி கொள்ளவும்.
பத்து நிமிடம் கழித்து மிதமான சூட்டில் அவற்றை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூடான ஆலு டிக்கி இப்போது தயார்.