சுக்கா செய்து அசத்தலாம் NPR-மசாலாவுடன்??
தேவையான பொருட்கள்:-
1.எலும்பில்லாத மட்டன் – 1/2 கிலோ
2.சின்ன வெங்காயம் – 100 கிராம்
3.இஞ்சி, பூண்டு விழுது – 11/2 டீஸ்பூன்
4.NPR மிளகுத்தூள் – 11/2 டீஸ்பூன்
5.காய்ந்த மிளகாய் – 6
6.NPR மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
7.NPR கரம்மசாலா தூள் – 2 டீஸ்பூன்
8.சோம்பு – ஒரு டீஸ்பூன்
9.எண்ணெய் – 100 மில்லி
10.கறிவேப்பிலை – சிறிதளவு
11.கொத்தமல்லி இலை – 1/2 கப்
12.உப்பு – தேவைக்கேற்ப
சுக்கா செய்முறை:-
1.மட்டனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
2.ப்ரசர் ஃபேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
3.இத்துடன் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4.இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
5.இத்துடன் மட்டனை சேர்த்து NPR மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறவும்.
6.காய்ந்த மிளகாயை கிள்ளிப்போடவும்.
7.NPR கரம் மசாலா தூள், சேர்த்து கிளறி மட்டன் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி விசில் போட்டு வேக வைக்கவும்.
8.5 விசில் வரை விட்டு ஆறியவுடன் திறக்கவும்.
9.இதில் NPR மிளகு தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை ஸ்டவ்வை சிம்மில் வைக்கவும்.
10.கடைசியில் மல்லித்தழை தூவி இறக்கவும்